இன்றைய இளையதலைமுறையினரை ஆட்டிவிக்க வந்துள்ளது ப்ளூவேல்(Blue Whale) கேம்.
இந்த விளையாட்டை, செயலி போல பதிவிறக்கம் செய்து விளையாட முடியாது, ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும்.
வித்தியாசம்,த்ரில் என்று சுற்றும் டீன்ஏஜ்களை குறி வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு ரஷ்யாவில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த விளையாட்டில் இணையும் விளையாட்டாளருக்கு தொடர்ந்து 50 நாட்கள் Administartor வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பார். தொடக்கத்தில் அதிகாலையில் பேய் படம் பார்க்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, பயத்திலிருந்து வெளியே வா என்பது போன்ற டாஸ்க்குள் கொடுக்கப்பட்டு அவற்றை புகைப்படம் எடுத்து பதிவிடச் சொல்வார்களாம்.
பின்னர் கையை கத்தியால் வெட்டு, மேம்பாலத்தில் நுனிப் பகுதிக்குச் செல், நீ தான் ப்ளூ வேல் என்பது போல டினேஷ்களை தனிமைப்படுத்தி அவர்களை கிட்டதட்ட சைக்கோவாக்கி 50வது டாஸ்க்காக தற்கொலைக்கு தூண்டுவார்களாம்.
2015 மற்றும் 2016 காலகட்டத்தில் இந்த விபரீத ஆன்லைன் விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் 130 இளம் சிறார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, பிரேசில், அர்ஜென்டினா என்று உலக நாடுகளைக் கடந்து இந்த விளையாட்டு இந்தியாவிலும் காலெடுத்து வைத்துவிட்டது என்பது மும்பையில் சமீபத்தில் நடந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
மும்பையில் 14 வயது சிறுவன் இந்த விளையாட்டின் போது தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.
மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ்,"ப்ளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டாக உள்ளது. இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோர்களும் இந்த விளையாட்டு குறித்து அதிக எச்சரிக்கை கொள்ள வேண்டும்
Recent Posts
Popular Posts
-
காமுகர்கள் சமூக வலைத்தளங்களை பாவித்து எப்படி சிறுமிகளை தந்திரமாக பிடிக்கின்றனர் 15 வயதை உடைய போலியான முக நூல் கணக்கை ஆரம்பித்து இந்த கணக்கி...
-
என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01 என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தை...
-
வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமட...
-
இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும் குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார். தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி ...
-
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று ...
-
இதயத்துடிப்பினிலே..... எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே! அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம் உம்மைக் காணாது நிலை தடுமாறி ந...
-
இரண்டு ரப்பர் சில்லடா !!!!! காற்றைக் குடிக்கும் சில்லடா !!!! எம் பாரம் சுமக்கும் சில்லடா !!!! உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமெடா !!!!!!!!...
-
சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி .
-
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே – 2 எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே –...
-
வலைப்பூவிலுள்ள socia l தளங்களான facebook , facebook like , twitter , you tube videos , onlin chart ,translate , tweet , joint chart , ph...
0 comments:
Post a Comment